Daily Parayana
Sri Rama Rama Ramethi
Tamil
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ரமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத் துல்யம்
ராம நாம வரானனே
English (Transliteration)
Sri Rama Rama Ramethi
Rame Rame Manorame
Sahasranama Tat Tulyam
Rama Nama Varanane
Vizhikku Thunai Thirumen Tamil
விழிக்கு துணை திருமென் மலர்பாதங்கள் மெய்க்கு துணை வேலும் மயிலும் நெஞ்சுக்கு துணை முருகா எனும் நாமங்கள் செஞ்சொல் புகழ் திருப்புகழே
English (Transliteration)
Vizhikku thunai thirumen malar paadhangal Meikku thunai velum mayilum Nenjuku thunai Muruga enum naamangal Senjol pugazh Thiruppugazhe
Uruvai Aruvai Ulathai
Tamil
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
English (Transliteration)
Uruvai Aruvai Ulathai Ilathai
Maruvai Malarai Maniyai Oliyayi
Karuvai Uyirai Kathiyai Vidhiyai
Guruvai Varuvai Arulvai Guhane
Kulam Tharum
Tamil
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா எனும் நாமம்
English (Transliteration)
Kulam Tharum Selvam Thandhidum Adiyaar
Paduthuyar Aayina Ellam
Nilam Tharum Seiyyum Neel Visumbu Arulum
Arulodu Perunilam Alikkum
Valam Tharum Matrum Thandhidum Petra
Thaayinum Aayina Seiyyum
Nalam Tharum Sollai Naan Kandukonden
Narayana Enum Naamam
Veyuru Tholipangan
Tamil
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
English (Transliteration)
Veyuru Tholi Pangan Vidamunda Kandan Miga Nalla Veenai Thadavi
Maasaru Thingal Gangai Mudimel Anindhu En Ullame Pugundha Athanaal
Nyayiru Thingal Sevvai Budhan Vyazhan Velli Sani Paambu Irandum Udane
Aasaru Nalla Nalla Avai Nalla Nalla Adiyaar Avarkku Migave